×

வைகையில் வெள்ளப்பெருக்கு: 5 மாவட்ட ஆற்றங்கரையோரம் மக்களுக்கு எச்சரிக்கை

மதுரை: வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து 5 மாவட்ட ஆற்றங்கரையோரம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மழை அதிகரித்துள்ளதால் அணைகளில் நீர் மட்டம் உயரத்தொடங்கியுள்ளது.

அந்த வகையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை வெளுத்தெடுத்ததால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 66.24 அடியாக உள்ளது; நீர்வரத்து 2,990 கனஅடியாக உள்ளது. இந்நிலையில் வைகை ஆற்றுப்பகுதியில் அளவுக்கதிகமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.

இதனால் வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மதுரை மாநகர மக்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post வைகையில் வெள்ளப்பெருக்கு: 5 மாவட்ட ஆற்றங்கரையோரம் மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Vaigai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு